உலகை மாற்றி புரட்சியாளர்கள்

உலகை மாற்றி புரட்சியாளர்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : உலகை மாற்றி புரட்சியாளர்கள்  
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-4.5 805

நூல் அறிமுகம்

• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை.

• மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள்.

• ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு.

• லத்தின் அமெரிக்காவின் ஆன்மாவாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை.

• ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி.

• சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம்.

• சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்த அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை.

• அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகுமுறையும்

இவர்களது வாழ்க்கை வரலாற்றை ஒரே நூலில் படித்து அறிந்து கொள்ள இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *