உமர் முக்தார் (சரித்திர நாவல்)

உமர் முக்தார் (சரித்திர நாவல்)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : உமர் முக்தார் (சரித்திர நாவல்)
ஆசிரியர் : ஏ.எம்.யூசுப்
வெளியீடு :சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு : GN-791

நூல் அறிமுகம்

“ஈரோடு செல்ல சென்னையிலிருந்து இரவு புகைவண்டியில் புறப்பட்ட நான், மிகவும் களைத்திருந்ததால் அரக்கோணம் தாண்டியவடன் தூங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்து, அதுவரை சிறிது நேரம் படிக்க யாரோ என் கையில் தந்த நாவலர் ஏ.எம்.யூசுப் எழுதிய உமர் முக்தார் என்ற நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
வண்டி ஓடிக்கொண்டிருந்தது. வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகள், அவற்றை மிக இலாவகமாக நாவலர் சொல்லிவந்த பாணி ஆகியவற்றில் நான் அப்படியே என்னை மறந்துவிட்டேன். படித்துக்கொண்டே இருந்தேன். எனது அயர்வு, களைப்பெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. நான், தொடர்ந்து படித்து முடித்து மனநிறைவுடன் அதை மடிக்கும்போது, பொழுது நன்றாக விடிந்துவிட்டதையும், வண்டி ஈரோட்டை நெருங்கிவிட்டதையும் அறிந்தேன்.
நான் உமர் முக்தார் சினிமாவை ஏற்கனவே பார்த்துள்ளேன். அதை மிகவும் இரசித்துள்ளேன். ஆனால் நாவலர் தந்துள்ள எழுத்து வடிவத்துக்கு முன்னால் சினிமா மிக சாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது. நான், நாவலரின் எழுத்தாற்றலை மிகவும் பாராட்டியதாக அவரிடம் சொல்லுங்கள்”. என்று கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சிராஜுல்மில்லத் அவர்களிடம் கூறியதிலிருந்தே இந்நூலின் அருமை புரிகிறது.
புதிய ரோமாபுரிக்கார்களான இத்தாலியர்களால் அடிமையாக்கப்பட்டிருந்த அரபு நாடான லிபியாவை, உஸ்தாத் உமர் முக்தார் தலைமையிலான போராளிகள் மீட்டெடுத்த வரலற்றை நாவலாக எடுத்துரைக்கும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

 

Share the Post

About the Author

Comments

Comments are closed.