நான் புரிந்து கொண்ட நபிகள் 

நான் புரிந்து கொண்ட நபிகள் 

 

 

 

Image may contain: text

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நான் புரிந்து கொண்ட நபிகள் 
ஆசிரியர் : அ.மாா்க்ஸ்
பதிப்பகம் : உயிா்மைபதிப்பகம் 
நுால் : IA-01

நான் புரிந்து கொண்ட நபிகள்
நபிகள் வெறும் அற பொதனைகள் செய்த இறைத் தூதா அல்ல.சமகால வரலாற்றில் செயலூக்கத்துடன் தலையிட்டவர்.மறுமையைப் பற்றியும் இறுதித் தீர்ப்புப் பற்றியும் பேசிய போதிலும் இந்த மண்ணிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமத்துவ சமூகத் திட்டத்தை வைத்துச் செயல்படுகிற மதம் இஸ்லாம்.வாழும் நெறிகளையும்,இறைக் கடமைகளையும் வலியுறுத்தும் புனித நூலாக மட்டுமின்றி அநீதிகளுக்கெதிராகப் போராடும் ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது திருக்குர்ஆன்.ஒட்டக மேய்ப்பராக வாழ்வைத் துவங்கி உலகை மாற்றியமைத்த முஹமது என்னும் நபிகள் நாயகம் மனிதர்க்குரிய பன்முக பண்புகளுடன் மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்.தலைமறைவாய் இயங்கிய ஒர போராளியாய.காதல் கொண்ட கணவராய், வாளேந்திய இறைத்தூதராய் வெற்றிகளை மட்டுமின்றி தோல்விகளையும் எதிர்கொண்ட தளபதியாய் எண்ணற்ற பரிமாணங்கள் உடையவர் நபிகள்.இஸ்லாம் மற்றும் நபிபகள் குறித்து அறியாதவர்களுக்க ஒரு எளிய அறிமுகமாகவும் ஏற்கனவே அறிந்தவர்களுக்கு சில புதிய செய்திகளை பகிர்ந்து கொள்வதாகவும் அமைகிறது இந்நூல்.
இந்த புத்தகத்தை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது

/ Islamic Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.