நபித் தோழர்கள் தியாக வரலாறு 

நபித் தோழர்கள் தியாக வரலாறு 

நூல் பெயர் : நபித் தோழர்கள் தியாக வரலாறு 
ஆசிரியர்     : மௌலவி.S.H.M. இஸ்மாயில் 
வெளியீடு   : சாஜிதா புக் சென்டர் 
நூல் பிரிவு : IHR-03–1306

நூல் அறிமுகம் :

கடந்தகால வரலாற்றை மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தவும் முடியாது; எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் முடியாது. இந்த வகையில் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும், அந்தஸ்தையும் உரிய முறையில் அறிய வேண்டுமென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு துவக்கம் முதல் துணை நின்று இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும், உயிரையும், உடல் உழைப்பையும் உரமாகப் பாய்ச்சிய உத்தமத்தோழர்களின் வரலாற்றைத் தெரிந்திருப்பது அவசியமாகும்.

இஸ்லாத்தை வளர்ப்பதிலும், காப்பதிலும் கடைபிடிப்பதிலும் அவர்கள் காட்டிய தியாகம், உறுதி நமது ஈமானுக்கு புத்துணர்ச்சியையும், உணர்வுகளுக்கு ஊக்கத்தையும் அளிக்கவல்லதாகும்.

இந்த அடிப்படையில் தியாகச் சுடர்களான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நல்லற தோழர்கள் சிலரின் வாழ்வையும், பணியையும் சுருக்கமாக தொகுத்து இந்நூலை முன் வைத்துள்ளார்கள்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.