தமிழக அரசியல் வரலாறு பாகம்-2

தமிழக அரசியல் வரலாறு பாகம்-2

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : தமிழக அரசியல் வரலாறு பாகம்-2
ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு : GP-641

நூல் அறிமுகம்

எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சி கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகக் பதிவு செய்திருக்கும் இந்தப் புத்தகத்தில் ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப்புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜிவ் படுகொலை என தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன.

காவிரி நீர்ப்பங்கீடு, இடஒதுக்கீடு போன்ற தமிழ் நாட்டின் உயிர்நாடி பிரச்னைகளை அதன் அரசியல், வரலாற்று பின்னணியுடன் விவரிக்கும் இந்தப் புத்தகம், அண்டை மாநில உறவுகளையும், மத்திய மாநில உறவுகளில் நிலவும் அரசியல் விளையாட்டுகளையும் படம் பிடிக்கிறது.

இன்றைய தமிழக அரசியலின் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியை பதிவு செய்திருப்பதோடு, தமிழகத்தில் நிலவும் சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம்.

2000ஆம் ஆண்டு நிகழ்வுகளோடு நிறைவு பெறும் இந்நூலின் களம் நம் காலகட்டத்துக்கு மிகவும் நெருக்கமானது. தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான ஆடு… புலி… அரசியல் தொடரின் வடிவம் இது

இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. பயனுள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.