சிந்துநதிக் கரையினிலே (சரித்திர நாவல்)

சிந்துநதிக் கரையினிலே (சரித்திர நாவல்)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : சிந்துநதிக் கரையினிலே (சரித்திர நாவல்)
ஆசிரியர் : ஹஸன்
வெளியீடு : புதுயுகம்
நூல் பிரிவு : GN-235

நூல் அறிமுகம்

இஸ்லாமிய வரலாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டது. திமிஷ்க் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய கலீஃபா அப்தல் மலிக் அர்களின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மூத்த பதல்வர் வலீத் பதவிக்கு வருகின்றார்.
தகபீ கிளையைச் சார்ந்த ஹஜ்ஜாஜ்பின் யூசுஃப் அவரது அமைச்சராக அமைகின்றார். ஹஜ்ஜாஜின் சகோதரர் காஸிம். அவர்தம் புதல்வர் முஹம்மது வீரத்தின் விளைநிலமாக விளங்குகிறார். சமர்க்கந்து போன்ற அமர்க்களங்களில் அரும்புகழ் காட்டி இமாதுத்தீன் (சன்மார்க்கத் தூண்) என்னும் அரிய பட்டத்தையும் பெறுகின்றார். அதற்கிடையே முஸ்லிம் அட்சியின் கீழிருந்த முக்ரான் எல்லையில் சிந்து நாட்டஇரசன் படைகள் அடிக்கடி தொல்லைகள் விளைவிக்கின்றன. இது பற்றிச் சிந்து நாட்டரசனிடம் தூது சென்ற உபைதுல்லாஹ்வும் அவருடன் சென்றவர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.
இலங்கைத் துறைமுகத்திலிருந்து அரபு நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வணிகக் குழுவொன்றை கொங்கு நாட்டருகே கொள்ளைக் கூட்டத்தினர் தாக்கித் தோல்வியடைகின்றனர். தோல்வியடைந்த குழுவுடன் தொடர்பு கொண்ட சிந்து நாட்டரசன், புயலிற் சிக்கி அடக்கலம் புகுந்த வணிகக் குழுவினரைச் சிறையிலிட்டு வாட்டுகின்றான்.
இக்காரணங்களால் கலீஃபாவின் ஆணைப்படி முஹம்மது பின் காஸிம் தலைமையில் அரபு நாட்டுப் படையொன்று சிந்து நாட்டை நோக்கி வருகின்றது. முஹம்மது பின் காஸம் போரைத் தவிர்ப்பதற்குச் செய்த முயற்சிகள் பயனற்று விடுகின்றன. போர்க்களத்திற்குதித்த அரபுப்படைகள் தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைக் கண்டு களிக்கின்றன.
சிந்து நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்த முஹம்மது பின் காஸிம் நாட்டின் நல்வாழ்விற்குரியன செய்வதில் மயல்கின்றார். இதற்கிடிடையே கலீபா வலீத் காலஞ்சென்று விடுகின்றார். அவர்தம் இளவல் சுலைமான் ஆட்சிக்கு வருகின்றார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், முஹம்மது பின் காஸிம் மீதும் அவர் குடும்பத்தவரிடமும் சுலைமானுக்கருந்துவந்த பகைமை உணர்வின் காரணமாக அவர் சில நடவடிக்கை எடுக்கிறார். அந்த நிலைமையில் முஹம்மது பின் காஸிம் அரும்பெரும் தியாகச் செயல் ஒன்றைப் புரிகன்றார்.
இவ்வரலாற்றை வீரமும் காதலும் ததும்ப மிகவும் சுவாரசியமான புதினமாக எடுத்துரைக்கிறார் இந்நூல் ஆசிரியர். பல இஸ்லாமிய சரித்திர நாவல்கள் எழுதிய ஹஸன் அவர்கள்.
சரித்திரத்தை காவியமாக அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

Share the Post

About the Author

Comments

Comments are closed.