ஐரோப்பாவில் முஸ்லீம் ஆட்சி

ஐரோப்பாவில் முஸ்லீம் ஆட்சி

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : ஐரோப்பாவில் முஸ்லீம் ஆட்சி
ஆசிரியர் : சையித் இப்ராஹிம் எம்.ஏ.,எல்.டி.,
வெளியீடு :யுனிவெர்சல் பப்ளிஷர்ஸ் 
நூல் பிரிவு : GHR-01 585

நூல் அறிமுகம்

ஐரோப்பாவின் இருண்ட காலம் எனக் கூறப்படும் காலத்திலே முஸ்லிம்கள் பக்தாதிலும் கெய்ரோவிலும் கர்த்தபாவிலும் அக்கால உலகிற்கே முன்னோடிகளாக இருந்தார்கள்.

இந்திய முஸ்லி்ம் ஆட்சியை ஆங்கிலேயர் இருட்டடிப்பு செய்து, கடைத்தெருக்களில் பேசப்படும் பொழுதுபோக்குப் பேச்சுக்களை உண்மையான சரித்திரமாக எழுதி ஏமாற்றிவிட்டார்களென்று ஜாதுநாத் ஸர்கார் என்பார் தாம் எழுதிய அவ்ரங்கஸேப் என்னும் நூலில் கூறுகின்றனர். ஆனால் ஐரோப்பியரோ அந்தலூஸில் நடந்த சிறப்பான முஸ்லிம் ஆட்சியை ஐரோப்பிய மாணவர்கள் கற்றுக் கொள்ளாத முைறயில் மறைத்தே விட்டார்கள். வெறுப்பால் குறுகிய நோக்கால் தீய சிந்தனையால் தப்பெண்ணத்தால் புறக்கணிப்பால் வஞ்சனையால் வாய்மையை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார்கள்.

இந்நூலில் ஐரோப்பாவின் உண்மை வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளது. வாசகர்களின் உள்ளத்தில் பெரியதொரு மனப்புரட்சியையும் வியப்பையும் உண்டாக்கும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.