இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள் 
ஆசிரியர் : செ. திவான்
வெளியீடு : யூனிவர்ல் பப்ளிஷர்ஸ் 
நூல் பிரிவு : GHR-4.1

நூல் அறிமுகம்

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை ராஜதானியில் புரட்சியின் பங்கே இல்லை என்ற வரலாற்றுப் பிழையினைத் திருத்திட இந்நூலில் முயற்சித்துள்ளேன்.

சுதந்திரமும் சுயமரியாதையும் இரு கண்கள் எனக்கருதி வாழும் இந்திய முஸ்லிம்கள் தங்கள் வீட்டை மறந்து நாட்டை நினைத்து தங்களை மெழுகுவர்த்திகளாக்கிக் கொண்டு இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் ஈட்டித் தந்தனர். நம் கண்ணறையின் ஒளி படாமல் கல்லறையில் துயிலும் அந்த விடுதலை வீரர்கள் கண்ணியத்திற்குரியவர்கள். அவர்கள் நம் கருத்தில் நிறைந்திருந்து கால காலங்களுக்கும் முஸ்லிம்கள் இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு சரிநிகர் சமமாக வாழவும் ஜனநாயகத்தால் ஆளவும் நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டேயிருப்பார்கள். அத்தகைய வீரத் தியாகிகளின் வரலாற்றினை நினைந்து போற்றுதல் மிகமிக அவசியம்.
இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கை விரிவாக எடுத்துரைக்கும் 1070 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.